Tamil Whatsapp Status
பிடித்தவர்களிடம் அன்பாய்
இருப்பதை விட
உண்மையாய் இருங்க..
அன்பை விட உண்மை
அதிக மகிழ்ச்சியானது..
அதிக ஆழமானது..
—————————————————————————–
எதிர் காலத்தில் நிம்மதியாக இருப்பேன் என்று நிகழ்காலத்தை தொலைக்கிறேன்…
—————————————————————————–
புகைப்படம் எடுக்கையில் மட்டும் புன்னகை என்றாகிவிட்டது பலரது வாழ்க்கையில்…
—————————————————————————–
நம்மளோட பலம் பலவீனம் ரெண்டுமே நமக்கு புடுச்சவங்களோட அன்பு தான்…
—————————————————————————–
கரம் பிடித்தவர்
துணையிருந்தால்
ஆழ்கடலையும்…
அழகாக கடக்கலாம்…
—————————————————————————–
முடிவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் முயற்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்தால் முழுமையான வெற்றி நிச்சயம் சிந்தித்து செயலாற்றுங்கள்
—————————————————————————–
அடுத்தவர்களின்
கண்களுக்கு
எப்படியோ
என் விழிகளுக்கு
உலக அழகி
என் அன்னையே…
—————————————————————————–
ஒரு மென்மையான வார்த்தை ஒரு கனிவான பார்வை ஒரு அன்பான புன்னகை ஆகியவற்றால் அதிசயங்களையும் அற்புதங்களையும் நிகழ்த்திக் காட்ட முடியும்…
—————————————————————————–
நிழலை
அழித்து
விடாதீர்கள்…
நிஜங்கள்
மறையக்கூடும்…
ஒருநாள் நிரந்தரமில்லாமல்…
—————————————————————————–
உள்ளத்தை எப்போதும் உளியாக வைத்துக்கொள் சிலையாவதும் சிறையாவதும் நீ செதுக்கும் தன்மையை பொறுத்ததது
—————————————————————————–
நிறைவேறா
கற்பனைகள்…
கனவில்
மட்டுமே
சாத்தியம்
போல…
(ஏக்கங்கள்)
—————————————————————————–
தூரம் என்பது இடங்களுக்கு தான் நம் இதயத்துக்கு அல்ல…
—————————————————————————–
சில சிறந்த தருணங்களுக்காக
காத்திருக்கும் பொழுதுகளில்
பல சிறந்த வாய்ப்புகள்
நம்மை கடந்து சென்றுவிடும்…
—————————————————————————–
ஒரு முறை உதவி செய்யதவறினால் செய்த உதவிகள் அனைத்தையும் மறந்து அவர்களை தூக்கியெறிந்து விடுகிறது சுயநல மனம்…
—————————————————————————–
எண்ணங்களும் நோக்கங்களும்
சரியாகவும் உண்மையாகவும்
இருந்து விட்டால்
உறவுகளை
உருவாக்க வேண்டிய
தேவை இல்லை
தானாகவே அமைந்து
விடுகிறது…
—————————————————————————–
கண்டஇடத்திலும் கொட்டக்கூடாதது குப்பைகள் மட்டுமல்ல நம் வீட்டுப்பிரச்சனைகளையும் தான்
—————————————————————————–
நெருக்கங்கள்
குறைய
குறைய
விவாதங்களும்
பின்னர்
விரோதங்களும்
எழுகின்றன
அனுபவமாக…
—————————————————————————–
நாம் எடுக்கும் சில பல முடிவுகள் பிறர்க்கு நகைச்சுவையாய் இருந்தாலும் அதன் காயத்தை நாம் மட்டுமே உணர்ந்திருக்க முடியும்… மனநிலை – பொறுத்தே
—————————————————————————–
அழகற்றவர் என்று யாரையும் ஒதுக்கிவிடாதே அங்கும் இதயம் துடித்துக்கொண்டிருக்கும் (படித்ததில் – பிடித்தது)
—————————————————————————–
நாளை என்பது
வெறும் கனவு
கனவு சில நேரம்
கானல் நீரே
இன்று மட்டுமே நிஜம்
நிஜத்தோடு போராடு
கனவை மறந்து…
—————————————————————————–
பிறர்
நம் மீது
வீசும் ஊசி
போன்ற வார்த்தைகள்
நமக்கு அளிக்கும்
உயர்தர சிகிச்சையாம்
(அக்குபங்சர்)
—————————————————————————–
நேசிக்கும்
நூறு பேரை
நேசிக்க
துவங்கினாலே
வெறுக்கும்
நான்கு பேரை
பற்றி யோசிக்க
நேரமிருக்காது…
—————————————————————————–
உன்னை வழிநடத்த
அறிவை பயன்படுத்து…!
மற்றவர்களை வழிநடத்த
இதயத்தை பயன்படுத்து…!
—————————————————————————–
வாழ்க்கையை பாரமென்று
நினைத்தால்
நம் சந்தோஷங்களும்
தூரம் தான்
—————————————————————————–
எந்திர
வாழ்க்கையை
வாழ கற்றுக்
கொண்ட நமக்கு
நம்மை பற்றி
யோசிக்க நேரமில்லை…
—————————————————————————–
வசதியாயிருக்கும்போதே
எளிமையாக
வாழ கற்றுக்கொண்டால்
ஏழ்மைநிலைக்கு தள்ளப்பட்டாலும்
மனம் ஏங்காது
வாழ்ந்தவாழ்க்கையை நினைத்து
—————————————————————————–
மகிழ்ச்சியாக
வாழ்க்கை நகரும்
போது மரணபயமும்
எட்டிப்பார்க்கும்…
மரணம்
வந்துவிடக்கூடாதென்று
—————————————————————————–
நல்ல
விதை விதைத்தால்
தான் செடி
நன்றாக வளர்ந்து
நல்ல பலனை
கொடுக்கும்…!
அது போல
நல்ல எண்ணங்கள்
இருந்தால் தான்
வாழ்க்கை பிரகாசிக்கும்…!
—————————————————————————–
உங்கள் தனித்திறமையை
பற்றி அறியாதவர்கள்
ஏதாவது குறை
சொல்லிக்கொண்டு இருந்தால்
அதை நினைத்து
தயவுசெய்து
கவலைப்பட்டுக்கொண்டு
இருக்காதீர்கள்…!
—————————————————————————–
அடுத்தவர் முதுகில்
சவாரி செய்யும்
சிலர் அறிவதில்லை
சொந்தகால்களின்
வலிமையை…!
—————————————————————————–
பொறாமையில்
யாரையும் வீழ்த்த
நினைத்தால்
நீதான் நிம்மதியிழந்து
தவிப்பாய்
—————————————————————————–
அடுத்து
என்ன நடக்குமென்று
தெரியாமல்
நகர்ந்து கொண்டிருக்கும்
வாழ்க்கையும்
சுவாரஸ்யமானதே
—————————————————————————–
தனிமை
எனக்கு ரொம்ப
புடிக்கும் காரணம்
என் மனதை
காயபடுத்த
அங்கே யாரும்
இருப்பதில்லை
—————————————————————————–
என்றோ
இழந்ததை நினைத்து
இன்று புலம்பாதே
நாளைய
நாள் நல்லநாள்
என்று நினைத்து வாழ்
—————————————————————————–
வாழ்க்கை
ஒரு அனுபவமுங்க
நல்ல அனுபவம்
கிடைச்சா பரவசப்படணும்
மோசமான அனுபவம்
கிடைச்சா பக்குவப்படணும்
அனுபவிங்க வாழ்க்கையை…
—————————————————————————–
உண்மை
ஒரு சில நேரத்தில்
மன வருத்தம் தான்
பேசும் பொய்
எப்போது உடையும்
என நினைக்க நினைக்க
மன அழுத்தம் தான்
அதற்கு உண்மையாகவே
இருந்துவிடலாம்…
—————————————————————————–
பயந்து பயந்து
வாழ்வதைவிட
துணிந்து எதிர்த்திடு
மரணம் ஒருமுறைதான்
—————————————————————————–
உலகத்தின் பார்வையை
நம்மால் மாற்றமுடியாது
நம் பார்வையில் பாதையில்
நாம் தெளிவாயிருப்போம்
—————————————————————————–
நாம தடுக்கி விழுந்தா
தூக்கிவிட இரண்டு கைகளும்
ஏறிமிதிக்க நான்கு கால்களாவது
காத்திருக்கும்…!
—————————————————————————–
என்றும் அஞ்சியே
வாழ்ந்தால் இறுதி
அஞ்சலியே நிகழ்த்தப்படும்
துச்சமென்று துணிவுடன்
நடந்தால் வாழ்வு
நம் வசப்படும்
—————————————————————————–
நல்லுள்ளங்களிடம்
உங்கள் மூளையை
ஆன் செய்து வையுங்கள்…!
போலி உறவுகளிடம்
உங்கள் எண்ணங்களை
ஆப் செய்து விடுங்கள்…!
—————————————————————————–
நாம் ஒன்றை நினைத்து
ஒரு முடிவு எடுத்தால்
அது நமக்கு எதிர்மாறாக
அமைந்து விடுகிறது
சில மனித மனங்களை
போலவே
—————————————————————————–
அறியாமல் செய்த தவறை
மன்னிக்க தெரியாத
மனிதர்களிடம் அறிந்து
செய்த தவறுக்கு
மன்னிப்பை எதிர்பார்ப்பது
முட்டாள்தனம்
—————————————————————————–
இறந்தகாலத்தை நினைத்து
வருந்துவதை விட
எதிர்காலத்தை நினைத்து
பயப்படுவதை விட
நிகழ்காலத்தை நினைத்து
சந்தோஷமாக வாழ்ந்து விட்டு
போய்விடு மனிதா
—————————————————————————–
நான் இறைவனிடம்
கேட்பது ஒன்று மட்டுமே
என்னைப் பிடிக்காதவர்களுக்கு
என்னை பாரமாக்கி விடாதே
எனக்கு பிடித்தவர்களை
என்னிடமிருந்து
தூரமாக்கி விடாதே
—————————————————————————–
உலகில் விலை
மதிப்பில்லாத விசயங்கள்
இரண்டு உண்டு
ஒன்று தாய்மையில்
உருவாகி மரணம்
வரை தொடரும்
உண்மையான அன்பு
இன்னோன்று
எதையும் எதிர்பார்க்காமல்
மற்றொருவர் மீது
நாம் வைக்கும் நம்பிக்கை
—————————————————————————–
உரிமை உள்ள இடத்தில்
கோபத்தை காட்டிணாலும்
புரிந்துகொள்வார்கள்
உரிமை இல்லாத இடத்தில்
புன்னகைத்தாலும்
புறக்கணித்து விடுவார்கள்
—————————————————————————–
வாழ்க்கை Online 😀
அன்பு Offline 😶
மனது என்றுமே Pending 🙄
கவலை நாளுக்கு நாள் Updating 📤
பிரச்சினை எப்படியும் Incoming 📞
பணம் என்றுமே Outgoing 💸
ஆனாலும் நான் Working 📚
சந்தோஷம் மெதுவா Downloading 📥
—————————————————————————–
கானல் நீரை பருகுவதால்
தாகம் தீராது
இன்று விதைதால்
இன்றே மரமாகாது
நதிகளை போல
இயல்பாகஓட கற்றுக்கொள்ளுங்கள்…!
—————————————————————————–
காலம் ⌚
நம்பிக்கைகளின் தொட்டில்
ஆசைகளின் கல்லறை
முட்டாள்களுக்குக் கற்றுத்தரும்குரு
புத்திசாலிகளுக்கு ஆலோசகன்
—————————————————————————–
உண்மையான அக்கறையோடு
ஒருவர் கூறும்
அறிவுரைகளை கடைபிடிக்காவிட்டாலும்
பரவாயில்லை
அறிவுரை கூறும்போது
சிரித்து அவமானப்படுத்தாமலாவது
இருக்கலாம்…!
—————————————————————————–
வாழ்வில்
இரு போராட்டம்தான்
ஜெயித்தவர் தக்கவைத்துக்கொள்ளவும்
தோற்றவர் ஜெயிக்கவும்
போராடுகிறார்…!
—————————————————————————–
பணம் பணம்
என்று ஓடிக்கொண்டிருக்கும்
வாழ்க்கையில்
மனதை நேசிக்கும்
உறவுகள் கிடைத்தால்
தொலைத்துவிடாதீர்கள்
—————————————————————————–
அவசரமாக
எடுக்கபடும் முடிவுகள்
அதிஷ்டத்தை போன்றது
ஏதோவொரு நேரத்தில்தான்
நன்மையைதரும்
சிந்தித்துசெயல்படுங்கள்
—————————————————————————–
பிடித்த வாழ்க்கையை
அமைத்துக்கொள்கின்றேன்
என்று
கிடைத்த வாழ்க்கையை
தொலைத்துவிடாதீர்கள்
—————————————————————————–
நாளைய
அதிஷ்டத்தை நம்பி
இன்றைய வாய்ப்புகளை
தட்டி கழிப்பவர்
எப்போதும்வெற்றி பெறமாட்டார்கள்
—————————————————————————–
இறந்த பின்நல்லவன்
என்று கூறும் சமூகம்
இருக்கும் போது
கெட்டவன் என்று
புறம் தள்ளும்…!
—————————————————————————–
நமக்கு பிடித்தவர்களோ
அல்லது நம் உறவுகளோ
நாம் பேசும் போது
அதனை கேலி செய்தாள்
அவர்களை விட்டு
சற்று விலகியே இருங்கள்
இல்லை என்றால்
சில நேரங்களில்
அது ஒரு வாக்குவாதமாக
முடிந்துவிடுகிறது…!
—————————————————————————–